பின்நவீனத்துவம்:

ஜிம் பவல்.

பின்நவீனத்துவம்: தொடக்கநிலையினருக்கு/ ஜிம் பவல்; விளக்கப்படங்கள் : ஜோ லீ; தமிழில்: க.பூரணச்சந்திரன். - முதற்பதிப்பு. - திருச்சி : அடையாளம், 2014. - 164 p. : ill. ;

Postmodernism: For Begineers.

ங்கள் பெரும்பாலான மக்களைப் போல இருந்தால், பின்நவீனத்துவம் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் துறையைப் பற்றி பிற நூல்களைப் போலத்தான் இதுவும் என்றால், உங்களுக்கு இந்த நூலும் எதையும் எடுத்துக் கூறாது. பின்நவீனத்துவம் என்பது அர்த்தமற்றது, அறிவுஜீவிகள் சிலரின் புத்திபூர்வ விளையாட்டுகளின் தொகுப்பு எனக் கடுகடுத்த விமர்சகர்கள் நினைக்கின்றனர். மாறாக, நமது காலத்தின் மிக அழமான, ஆன்மிக, தத்துவ நெருக்கடிகளுக்கு, அறிவொளியின் தோல்விக்கு எதிர்வினை அது. ஜிம் பவல் மாறிவருகின்ற உலகினூடாக, மக்களுக்கு வழிதேடப் பயன்படும் ‘நிலப்படங்களின்’ தொடர்ச்சியே பின்நவீனத்துவம் என்னும் நிலைப்பாட்டைக் கொள்கின்றார். ஃபூக்கோவின் அறிவு அதிகாரம், ஜேம்சனின் பின்நவீனத்துவ வரைபடமாக்கல், பூத்ரியாரின் ஊடகங்கள், ஹார்வியின் காலம்-வெளி குறுக்கல், தெரிதாவின் தகர்ப்பமைப்பு, தெலூஸ், கத்தாரி ஆகியோரின் நிலத்தடித் தண்டுகள் ஆகிய சிந்தனைகளைப் ‘பின்நவீனத்துவம்: தொடக்கநிலையினருக்கு’ என்னும் இந்த நூல் தருகின்றது. பின்நவீனத்துவச் செயற்கைகளான மடோனா, சைபர்பங்க் பற்றியும் அறிவியல் புதினங்கள், பௌத்தச் சூழலியல், டெலிடில்டானிக்ஸ் பற்றியும் இந்நூல் விவாதிக்கின்றது.

9788177201826


கட்டுரைகள்.
தத்துவம்.

700.4113 / JIM

Powered by Koha